தேசிய செய்திகள்

நாட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் 64 சதவீதம் தெலுங்கானாவில் உள்ளன: மந்திரி மஹ்மூத் அலி பேச்சு

நாட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் 64 சதவீதம் தெலுங்கானாவில் உள்ளன என மந்திரி மஹ்மூத் அலி பேசியுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் உள்துறை மந்திரி முகமது மஹ்மூத் அலி பாதுகாப்பு நகரம் திட்டத்தின் கீழ் பெரிய அளவிலான சி.சி.டி.வி. நெட்வொர்க்குகளை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த திட்டத்தின்படி, காவல் துறையின் ஆணையரகங்களை இணைக்கும் வகையில் 2,306 சி.சி.டி.வி. கேமிராக்களுக்கான நெட்வொர்க்குகள் தொடங்கி வைக்கப்பட்டன.

இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய மந்திரி மஹ்மூத் அலி, தெலுங்கானா போலீசாரின் பயணம் பற்றி குறிப்பிட்டதுடன், நவீன தொழில் நுட்பம் மற்றும் நடைமுறைகளை கொண்டு நாட்டின் சிறந்த காவல் படைகளில் ஒன்றாக எப்படி உருவெடுத்தது என்பது பற்றியும் பேசினார்.

இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு மற்றும் மிலாட் ஜூலஸ் பண்டிகைகளின்போது, தெலுங்கானா மாநில காவல் துறையின் ஒருங்கிணைந்த உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள அனைத்து துறைகளும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என்று அந்த மையத்தின் இயக்குநர் மற்றும் நகர காவல் ஆணையாளரான சி.வி. ஆனந்த் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின்போது, நவீன வசதிகள் மற்றும் திறன்கள் ஆகியவை பற்றி விளக்கப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தெலுங்கானாவின் திறனை இன்னும் மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள சி.சி.டி.வி. உட்கட்டமைப்புடன் இந்த பெரிய அளவிலான நெட்வொர்க்குகளும் சிறப்பாக பணியாற்ற உதவும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு