தேசிய செய்திகள்

தசரா, தீபாவளியை வீட்டிலேயே கொண்டாடுங்கள்; பொது இடங்களில் கூடாதீர்கள் - ஒடிசா முதல்-மந்திரி வேண்டுகோள்

தசரா, தீபாவளியை வீட்டிலேயே கொண்டாடுங்கள் என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

ஒடிசா மாநில மக்கள், துர்கா பூஜை (தசரா) மற்றும் தீபாவளி பண்டிகைகளை தங்கள் வீடுகளிலேயே கொண்டாடுமாறு அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் ஓணம் பண்டிகைக்கு பிறகு கொரோனா தொற்று மும்முடங்காக உயர்ந்து விட்டது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முககவசம் அணியாதது போன்ற நடவடிக்கையே இதற்கு காரணம்.

கொரோனாவால் கடந்த 7 மாதங்களாக ஒடிசா மக்கள் பல கஷ்டங்களை சந்தித்து உள்ளனர். எனவே தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுங்கள். பொது இடங்களில் கூடாதீர்கள். சமூக இடைவெளி, முககவசம் அணிதல், கைகழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடியுங்கள் என்று கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்