தேசிய செய்திகள்

கேரளாவில் கால் பதித்தது பா.ஜனதா: நடிகர் சுரேஷ் கோபி வெற்றி

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவின் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகின்றன. மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியான யுடிஎப் கூட்டணி 17 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎப் கூட்டணி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

கேரளாவில் இதுவரை வெற்றியே பெறாத பாஜக முதல் முறையாக ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர்  ராஜீவ் சந்திரசேகர்  முன்னிலையில் உள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து