தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. #CBSEresults

தினத்தந்தி

புதுடெல்லி,

சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கியது நாடு முழுவதும், 16,38,428 மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதினர் .பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், முதல் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். cbse.examresults.net , results.nic.in/index , cbseresults.nic.in, results.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 3 மணி நேரத்திற்கு முன்பாகவே முடிவுகள் வெளியாகியுள்ளன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்