தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணி நேர படி ரத்து

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான படி (ஓ.டி. அலவன்ஸ்) ரத்து செய்யப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. 7வது சம்பள கமிஷன் சிபாரிசுப்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சகங்கள், துறைகள் அவற்றுடன் இணைந்த கீழ்நிலை அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

இருப்பினும், அமைச்சகங்கள் சாராத, அரசிதழ் பதிவு பெறாத மத்திய அரசு ஊழியர்கள், அதாவது, மின் சாதனங்கள், எந்திரங்கள் ஆகியவற்றை இயக்கும் ஊழியர்கள் தொடர்ந்து கூடுதல் பணி நேர படி பெறுவார்கள். அவர்களின் பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து அமைச்சகங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேட்டை உறுதி செய்தால்தான் இந்த படி வழங்கப்படும் என்றும், உயர் அதிகாரியின் எழுத்துப்பூர்வமான உத்தரவின்பேரில்தான் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்றும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து