தேசிய செய்திகள்

தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் நுழைய தடை: மத்திய அரசு உத்தரவு

தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் நுழைய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின்கீழ், வெளிநாட்டினரை கையாள்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசவிரோத செயல்கள், உளவு பார்த்தல், கற்பழிப்பு, கொலை, பயங்கரவாத செயல்கள், குழந்தை கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரை இந்தியாவில் நுழையவோ, இந்தியாவில் தங்கி இருக்கவோ அனுமதி மறுக்கலாம். இத்தகைய வெளிநாட்டினரை நாடு கடத்தும்வரை அவர்களது நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்க வேண்டும்.

அதற்காக மாநிலங்கள் தடுப்புக்காவல் முகாம்களை அமைக்க வேண்டும். எந்தவகை விசாவுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரும் தங்களது பயோமெட்ரிக் பதிவுகளை எடுக்க விசா அதிகாரியை அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் வெளிநாட்டினரை எல்லை பாதுகாப்பு படையினரும், கடலோர காவல்படையினரும் தடுத்து, திருப்பி அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்