புதுடெல்லி,
நாடு முழுவதும் ஒரே வரியான ஜிஎஸ்டி-யை நடைமுறைக்கு கொண்டு வந்ததால் மாநில அரசுகள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதை சரி கட்ட மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.
ஆனாலும், மாநில அரசுகளுக்கு ஒதுக்கவேண்டிய இழப்பீட்டு நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக பல மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையில், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியின் முதல் தொகுப்பாக ரூ.6 ஆயிரம் கோடியை கடந்த 23 ஆம் தேதி 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்தது.
இந்நிலையில். ஜி.எஸ்.டி. இழப்பீடாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ. 6,000 கோடி இரண்டாவது தொகுப்பை மத்திய அரசு இன்று ஒதுக்கியுள்ளது. அதன்படி ரூ. 6 ஆயிரம் கோடியை 16 மாநிலங்களுக்கும், 3 யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.