தேசிய செய்திகள்

மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் - அதிமுக எம்.பி. தம்பிதுரை

மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை பாதிக்கும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தெடங்கியது. கெரேனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு அவைகளும் காலை 11 மணிக்கு தெடங்கி நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

மாநிலங்களையில் இன்று மேகதாது அணை விவகாரத்தை எழுப்பிய அதிமுக எம்.பி தம்பிதுரை கூறியதாவது: மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை பாதிக்கும். அண்டை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்ட எப்படி நிதி ஒதுக்க முடியும்? மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது