தேசிய செய்திகள்

இந்தியர்களை மீட்க 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு

இந்தியர்களை மீட்க 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஹுபெய் மாகாணத்தில் வசித்து வரும் இந்தியர்களை அழைத்துவர 2 விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவும் சீன அரசின் ஒப்புதல் கேட்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று கூறுகையில், ஹுபெய் மாகாணத்தில் இருந்து இந்தியர்களை மீட்டு வர 2 விமானங்கள் இயக்குவதற்கு அனுமதி தருமாறு சீன அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சீன அரசுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும் ஹுபெய் மாகாணத்தில் வசித்து வரும் இந்தியர்களுக்கும் இந்த தகவல் பகிரப்பட்டு உள்ளது. அதன்படி தாய்நாடு திரும்புவதற்காக இதுவரை அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளாதவர்கள் விரைவில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்