புதுடெல்லி
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஐ தாண்டி உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவல் படி, மார்ச் 18 ந்தேதி வரை , 166 நாடுகளில் 207,860 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகளும் 8,657 இறப்புகளும் பதிவாகி உள்ளன.
மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து வேலை செய்யவும், மீதமுள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு வரவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
குழு பி மற்றும் சி ஊழியர்களில் 50 சதவீதம் பேர் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு வர வேண்டும். மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட வேண்டும் என்பதை துறைத் தலைவர்கள் உறுதிப்படுத்தலாம் என்று பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நாளில் அலுவலகத்திற்கு வரும் அனைத்து ஊழியர்களுக்கும் வேலை நேரத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.