தேசிய செய்திகள்

“ரகசிய ஆவணங்களை வாட்ஸ்-ஆப்பில் பகிர வேண்டாம்” - அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

முக்கியமான ஆவணங்களைப் பகிர வாட்ஸ்-ஆப், டெலிகிராம் போன்ற செயலிகளை உபயோகிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரகசிய ஆவணங்கள் மற்றும் காணொலி கூட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சக அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி ரகசியமான மற்றும் முக்கியமான ஆவணங்களைப் பகிர வாட்ஸ்-ஆப், டெலிகிராம் போன்ற செயலிகளை உபயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட நிறுவனங்களுக்கான சேமிப்பு சர்வர்கள் நாட்டுக்கு வெளியே இருக்கும் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதால், இது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் முக்கிய விவகாரங்கள் குறித்து காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டங்களின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி முக்கிய விவகாரங்கள் குறித்து காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டங்களின்போது ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உபகரணங்களை கூட்டம் நடைபெறும் அறைக்கு வெளியே வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்களில் கூகுள் ஹோம், அலெக்ஸா, சிரி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது