தேசிய செய்திகள்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினை பெறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் தொகை காசோலை, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை டெல்லியில் குடியரசு தலைவரால் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் 20 ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்