தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; மாயாவதி வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நேற்று 24வது நாளை எட்டிய நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை தெருவில் இறங்கிப் போராட வைத்திருக்கிறது.

அவர்கள் மீது பிடிவாதமான அணுகுமுறைக்குப் பதிலாக அனுதாப அணுகுமுறையை அரசு பின்பற்ற வேண்டும். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும். அதுதான் பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையும் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு