தேசிய செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

நாகை,

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு, தென்னை உள்ளிட்ட மரங்களின் பாதிப்பு, வீடுகள், உடமைகள், மின்சாரம், சாலைகள் சேதம், மீனவர் படகுகள் என பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், மீனவர்கள் பெரும் துயரத்தை எதிர்கொண்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். ஆறுகாட்டுத்துறையில் பொதுமக்களிடம் பேசுகையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.