தேசிய செய்திகள்

தமிழகம் உள்பட 8 மாநில செயலர்களுக்கு மத்திய சுகாதார செயலர் கடிதம்

டெல்டா பிளஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 8 மாநில செயலர்களுக்கு மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா முதல் அலையை விட, 2வது அலையில் அதிக அளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் காணப்பட்டன. இந்நிலையில், தமிழகம், குஜராத், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் அரியானா ஆகிய 8 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், டெல்டா பிளஸ் கொரோனாவை கட்டுப்படுத்துதல், தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டு கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது