தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 6 ஆயிரம் தண்ணீர் பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் - மத்திய அரசு அமைக்கிறது

நாடு முழுவதும் 6 ஆயிரம் தண்ணீர் பரிசோதனை ஆய்வுக்கூடங்களை மத்திய அரசு அமைக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் தண்ணீர் அளவு, தரம், வினியோகம் ஆகியவற்றை மேம்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக நாடு முழுவதும் 6 ஆயிரம் தண்ணீர் பரிசோதனை ஆய்வுக்கூடங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே 2 ஆயிரம் பரிசோதனைக்கூடங்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதி 4 ஆயிரம் பரிசோதனைக்கூடங்களை வரும் ஆண்டுகளில் அமைக்க மத்திய அரசு எண்ணி உள்ளது என்று மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார்.

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அரசு தண்ணீர் சேவையை மேம்படுத்த ஒவ்வொரு கிராமத்துக்கும் தண்ணீர் தர பரிசோதனை உள்கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியிலும் 8.5 கோடி வீடுகளுக்கு குழாய்வழி குடிநீர் வழங்க பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது