புதுடெல்லி,
மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரன் நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ஆனந்த் நாகேஸ்வரனின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
ஐஐஎம் அகமதாபாத்தில் முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்துள்ள ஆனந்த் நாகேஸ்வரன் அமெரிக்காவின் மசஜூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டரல் பட்டம் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சகத்தின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் உடனடியாக தனது பணியில் இணைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.