புதுடெல்லி,
இது தொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் ரேஷன் பொருள் கிடையாது என்று மாநில அரசுகள் கூறக்கூடாது. ஆதார் அட்டை இல்லை என்கிற ஒரே காரணத்திற்காக தகுதி உள்ள பயன்பெறுவோர் பட்டியலில் இருந்து ஒருவரையும் நீக்கக்கூடாது என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவருக்கு ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் சிறுமிக்கு ரேஷன் பொருள் இல்லை என மாநில அரசு மறுத்து விட்டது. உணவு வாங்குவதற்கு பணம் இல்லாமல் அந்த சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.
அதன் காரணமாக ஆதார் அட்டை இல்லை என்றால் கூட ரேஷன் அட்டை வைத்திருப்பவருக்கு ரேஷன் பொருள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உணவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.