தேசிய செய்திகள்

அல் கொய்தா, ஐ.எஸ். இந்திய கிளைகளான 2 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை மத்திய அரசு அதிரடி

அல் கொய்தா, ஐ.எஸ். இந்திய கிளைகளான 2 பயங்கரவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

புதுடெல்லி,

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் இந்திய கிளையான அகியுஸ் (இந்திய துணை கண்டத்தின் அல்கொய்தா), ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளையான ஐ.எஸ்.ஐ.எஸ்கே (ஈராக்கின் இஸ்லாமிய அரசு மற்றும் ஷாம் கொராசன்) அமைப்புகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்து உள்ளது. அகியுஸ் பயங்கரவாத இயக்கம் அண்டைய நாடுகளில் பல்வேறு பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இந்திய துணை கண்டத்தில் பயங்கரவாத செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. பயங்கரவாத செயல்களுக்கு இந்திய இளைஞர்களை வழிநடத்தவும், சேர்க்கவும் முயற்சி செய்கிறது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ்கே அமைப்பும் இந்திய துணை கண்டத்தில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கிறது, இளைஞர்களை சர்வதேச பயங்கரவாதத்திற்கு சேர்க்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் கடுமையான சட்டமாக கருதப்படுகிற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்