புதுடெல்லி,
அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் வரை இருப்பதை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய ஊழல்தடுப்பு ஆணையம் திருத்தச்சட்டம்(2021) என்ற பெயரில் மத்திய அரசு அவசரச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. வரும் 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் இருக்கும் நிலையில் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
1997- ஆம் ஆண்டுக்கு முன்பாக சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலம் வரையறுக்கப்படவில்லை. சிபிஐ இயக்குநர்களை எப்போது வேண்டுமானாலும் அரசால் பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. எனினும், வினித் நரைன் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் என நிர்ணையித்தது.