கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

பாலியல் குற்றங்களுக்கான விரைவு கோர்ட்டு அமைக்கும் பணி: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பாலியல் குற்ற வழக்குகளுக்கான விரைவு கோர்ட்டு அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

குற்றவியல் திருத்த சட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய மத்திய அரசு நாடு முழுவதும் 1,023 சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைக்க முடிவு செய்தது. இதில் 389 கோர்ட்டுகள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்சோ) விசாரிப்பவை ஆகும்.

இதில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 674 கோர்ட்டுகள் மட்டுமே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், நாகாலாந்து உள்ளிட்ட 17 மாநிலங்கள் மட்டுமே தங்களுக்கான அனைத்து கோர்ட்டுகளையும் அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கின்றன.

பல மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து கோர்ட்டுகளையும் இன்னும் அமைக்கவில்லை. எனவே அந்த மாநிலங்களுக்கு, இந்த கோர்ட்டுகளை அமைத்து செயல்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த கோர்ட்டுகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...