தேசிய செய்திகள்

ரபேல் ஒப்பந்தம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்: மாயாவதி

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக ரூ.59 ஆயிரம் கோடிக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து விசாரிக்க பிரான்ஸ் அரசு நீதிபதி ஒருவரை நியமித்து உள்ளது.

தினத்தந்தி

இதைத்தொடர்ந்து இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மக்களுக்கு திருப்தியை ஏற்படுத்த வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ரபேல் ஒப்பந்தம் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க பிரான்ஸ் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதன் மூலம் இந்த விவகாரம் மீண்டும் தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இந்த விவகாரத்தை மத்திய அரசு சரியான முறையில் கவனத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது என்று குறிப்பிட்டு உள்ளார். பொதுமக்களின் திருப்திக்கு ஏற்ப ரபேல் சர்ச்சையை தீர்ப்பதன் மூலம் மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என பகுஜன் சமாஜ் நம்புவதாகவும் மாயாவதி அந்த பதிவில் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை