தேசிய செய்திகள்

தேவைப்பட்டால் கும்பல் தாக்குதலுக்கு எதிராக சட்டம் பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் தகவல்

தேவைப்பட்டால் கும்பல் தாக்குதலுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #RajnathSingh #Lynchings

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் பசு பாதுகாப்பு, குழந்தைகள் கடத்தல் தொடர்பான கும்பல் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்கனவே மத்திய அரசை விமர்சனம் செய்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் வீட்டிற்கு பசுக்களை வாங்கி சென்ற இஸ்லாமிய இளைஞர் அக்பர் கான் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். அவரை மருத்துவமனையில் சேர்ப்பதில் போலீஸ் காட்டிய அலட்சியம் காரணமாக அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பி எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கிறது.

இன்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது இவ்விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தது. இதுபோன்ற தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிகை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

பகுஜன் சமாஜ்வாட்சி கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில், பா.ஜனதா கட்சிதான் கும்பல் தாக்குதலில் ஈடுபடுகிறது. இதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டும் என்றார். அல்வார் தாக்குதலுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன், ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் பா.ஜனதாவால் நடவடிகை எடுக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன், இதுபோன்ற தாக்குதல்கள் குறுகிய மனம் கொண்ட பா.ஜனதாவினராலே முன்னெடுக்கப்படுகிறது,என்றார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், தேவைப்பட்டால் கும்பல் தாக்குதலுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கும்பல் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்