தேசிய செய்திகள்

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு: மத்திய மந்திரி ஷெகாவத்

மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், ராஜஸ்தான் மாநிலம் கோடாவுக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தினத்தந்தி

நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, மொத்தம் உள்ள 19 கோடி வீடுகளில் 3 கோடியே 29 லட்சம் வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்பு இருந்தது. அதன்பிறகு இதுவரை 5 கோடி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் 8 கோடியை தாண்டும். 2024-ம் ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறோம். 1 லட்சத்து 10 ஆயிரம் கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்