தேசிய செய்திகள்

லோக்பால் அனுப்பி வைக்கும் ஊழல் புகாரை விசாரிக்க இயக்குனரை நியமிக்காத மத்திய அரசு: ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம்

குரூப் ஏ.ப.,சி.டி. பிரிவு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் மீது பூர்வாங்க விசாரணை நடத்த அவற்றை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு லோக்பால் அனுப்பி வைக்கும். அந்த புகார்களை விசாரிக்க விசாரணை இயக்குனரை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.

தினத்தந்தி

ஆனால், லோக்பால் அமைப்பு அமலுக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், விசாரணை இயக்குனரை மத்திய அரசு இன்னும் நியமிக்கவில்லை என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் ஆணையம் மேலும் கூறியிருப்பதாவது:-

விசாரணை இயக்குனர் நியமிக்கப்படா விட்டாலும், நாங்கள் புகார்களை பெற்று வருகிறோம். கடந்த மார்ச் மாத நிலவரப்படி, லோக்பாலிடம் இருந்து 41 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 36 புகார்களை விசாரித்து முடித்து அறிக்கை அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு ஆணையம் கூறியுள்ளது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்