தேசிய செய்திகள்

டெல்லி ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி அரசின் அதிகாரங்களை குறைத்து, துணை நிலை ஆளுநரின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி அரசு திருத்த மசோதா, 2021-இன்படி, அந்த யூனியன் பிரதேச நிவாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது;

எந்தவொரு நிவாக நடவடிக்கை தொடாபாக முடிவு எடுக்கும் முன்னா, அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை டெல்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22-ல் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மாநிலங்களவையிலும் மேற்கூறிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து