தேசிய செய்திகள்

46 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 % மேல் உள்ளது: மத்திய அரசு எச்சரிக்கை

46 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்துவது தவிர தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45-60 வயது பிரிவினருக்கு தடுப்பூசி முன்னுரிமை அளித்து போடப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மூன்றாவது அலை குறித்த அச்சம் எழுந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளா, மராட்டியம், கர்நாடகா, தமிழகம், ஒடிசா, மிசோரம், மேகலாயா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகரிப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை