தேசிய செய்திகள்

சந்திரபாபு நாயுடு முற்போக்கான முதல்-மந்திரி: சிவராஜ் சிங் சவுகான் புகழாரம்

சந்திரபாபு நாயுடு முற்போக்கான முதல்-மந்திரி என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆந்திர மாநிலத்தின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுகான், "ஆந்திர முதல்-மந்திரியுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். சந்திரபாபு நாயுடு ஒரு முற்போக்கான முதல்-மந்திரி. மேலும் அவர் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர். ஆந்திராவின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்குவோம்" என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது