தேசிய செய்திகள்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சந்திரசேகர ராவ் தொலைபேசியில் வாழ்த்து

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு, சந்திரசேகர ராவ் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையொட்டி, அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ரெட்டி தலைமையில் ஆந்திரா முன்னேற்றம் அடையும் என்றும், ஆந்திரா-தெலுங்கானா இடையிலான உறவு முன்னேற்றம் அடையும் என்றும் அவர் கூறினார்.

இதுபோல், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு சந்திரசேகர ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி தலைமையில் நாடு முன்னேற்றம் அடைய விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்