கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்த நாளை மறுநாள் (ஜூன் 1) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, தமிழகம் புதுவையில் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், வெப்ப அலை நீடிப்பதால், பள்ளிகளை திட்டமிட்டபடி ஜீன் 1ல் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெயில் காரணமாக தமிழகத்திலும் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்