தேசிய செய்திகள்

கர்தார்பூர் வழித்தடம் நாளை முதல் திறப்பு; பஞ்சாப் முதல் மந்திரி வரவேற்பு

கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட உள்ளதை பஞ்சாப் முதல் மந்திரி சரண் ஜித் சிங் சன்னி வரவேற்றுள்ளார்.

தினத்தந்தி

சண்டிகர்,

பஞ்சாபை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி அமைந்துள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், தமது கடைசி காலத்தில் அப்பகுதியில்தான் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படு கிறது. அவரது நினைவாக தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்று தரிசிப்பது சீக்கியர்களின் புனித கடமைகளுள் ஒன்றாகும்.கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கர்தார்பூர் வழித்தடம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு கர்தார்பூர் வழித்தடம் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட உள்ளதை பஞ்சாப் முதல் மந்திரி சரண் ஜித் சிங் சன்னி வரவேற்றுள்ளார். மேலும் தனது அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள மந்திரிகள் வரும் 18 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள புனித தலத்திற்கு செல்ல இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்