தேசிய செய்திகள்

தமிழகத்தின் அம்மா உணவகம் போல மராட்டியத்தில் மலிவு விலை உணவகங்கள்: ரூ.10-க்கு மதிய உணவு

தமிழகத்தின் அம்மா உணவகம் போல மராட்டியத்தில் ரூ.10-க்கு மதிய உணவு மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

மும்பை,

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா உணவகம் போல் மராட்டிய மாநிலத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சிவ்போஜன் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

மராட்டிய சட்டசபை தேர்தலின் போது சிவசேனா தனது தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்காக மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என தெரிவித்தது. இந்த நிலையில் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டம் குடியரசு தினம் முதல் அமலுக்கு வந்தது.

முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 50 இடங்களில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டன. இங்கு ரூ.10-க்கு வழங்கப்படும் மதிய உணவில் அரிசி சாதம், 2 சப்பாத்தி, பருப்பு குழம்பு, பொறியல் ஆகியவை இடம் பெறுகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை