தேசிய செய்திகள்

ஜி எஸ் டி அமலுக்கு வரும்போது பல்வேறு சோதனைச் சாவடிகள் மூடப்படும் - மத்திய அமைச்சர்

ஜி எஸ் டி வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும்போது பல்வேறு சோதனைச் சாவடிகள் மூடப்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி

கருத்தரங்கம் ஒன்றில் பேசுகையில் அவர், கால்நடை வளர்ப்பு, சுரங்கம் மற்றும் வனம் தொடர்பான சோதனைச் சாவடிகள் மூடப்படும். ஏனெனில் இவற்றை நடத்துவது காலத்தை வீணடிப்பதாக இருக்கும் என்பதால் மூடப்படுகின்றன என்றார் அமைச்சர்.

ஜி எஸ் டி வரிமுறை சுமார் 165 ஆண்டுகளாக உலகில் உள்ளது; முதன் முதலில் அது பிரான்ஸ்சில் நடைமுறைக்கு வந்தது என்று அவர் கூறினார். அமைச்சருக்கு முன் பேசிய வருவாய் செயலர் அஸ்முக் ஆதியா ஜி எஸ் டி வரி முறை நடைமுறைக்கு வந்தப்பிறகு ஒரு சில சோதனைச் சாவடிகளே திறந்திருக்கும் என்றார்.ஏனெனில் ஜி எஸ் டி வரிமுறையின் கீழ் பெரும்பாலான துறைகள் வந்துவிடுகின்றன என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு