தேசிய செய்திகள்

நீரை சேமிக்க தவறினால் சென்னை, பெங்களூரு நகரங்கள் கேப்டவுன் போல மாறும்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

நீரை சேமிக்க தவறினால் சென்னை, பெங்களூரு நகரங்கள் கேப்டவுன் போல மாறும் என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

தண்ணீரைச் சேமிக்காவிட்டால் சென்னை,பெங்களூரு ஆகிய நகரங்கள் கேப்டவுன் போல மாறும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது:- நாட்டில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், தனிநபருக்கு கிடைக்கக் கூடிய சராசரி நீரின் அளவும் குறைந்து வருகிறது. தண்ணீரைச் சேமிப்பதற்கான தங்களது பொறுப்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இல்லையெனில், நாட்டில் பெரும் பகுதி மக்கள் தண்ணீப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். சென்னை, பெங்களூரு ஆகிய பெருநகரங்கள் கேப்டவுன் போல மாறிவிடும்.

இந்தியாவில் உரிமைகளைப் பற்றி மக்கள் அதிகம் பேசுகின்றனா. ஆனால், தங்களுக்கான பொறுப்புகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. தண்ணீரை சேமிக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும். தொழிற்துறையினருக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது.

இயற்கை வளங்களின் பாதுகாவலாகளாக மக்கள் மாறினால் எல்லாம் சரியாகிவிடும் என்றார். மேலும், உலக அளவில் நிலத்தடி நீரை பெரிதும் சாந்த நாடாக இந்தியா உள்ளது. எனினும், நமது மழைநீ சேமிப்புத் திறன் குறைவாகவே உள்ளது எனவும் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...