ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து கொள்ள உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பின்பு சுகாதார பாதிப்புகள் எனக்கு ஏற்பட்டன. நேற்றிலிருந்து கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.
இதனால், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து கொள்ள உள்ளேன். எஸ்.எம்.எஸ். மருத்துவமனையிலேயே சிகிச்சை செய்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நலமுடனேயே உள்ளேன். விரைவில் மீண்டும் வருவேன். உங்களுடைய ஆசிகளும், வாழ்த்துகளும் என்னுடன் உள்ளன என தெரிவித்து உள்ளார்.