தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஷ்கார் மாநிலம் தாண்டேவாடா மாவட்டத்தில் உள்ள கிரந்துல் போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று சரணடைந்தனர்.

அவர்களில் இருவர், கடந்த 2015-ம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்கள். மற்ற இருவரும், 2013-ல் ஒரு வாக்குச்சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தாண்டேவாடா எஸ்.பி. அபிஷேக் பல்லவா கூறினார். நக்சலைட்டுகளுக்கான மறுவாழ்வுத் திட்டமான, அவர்களை சொந்த கிராமம், வீட்டுக்கு திரும்ப அழைக்கும் லோன் வரத்து, சரணடைந்த 4 நக்சலைட்டுகளையும் ஈர்த்துள்ளதாக அவர் கூறினார். இத்திட்டத்தில் இதுவரை 386 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாகவும் அவர்

தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு