தேசிய செய்திகள்

சத்தீஷ்கார்: மந்திரியின் வீட்டில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

25 நாட்கள் விடுமுறை முடிந்து வேலைக்கு வந்து ஒரு வாரமே ஆன நிலையில், சலாமே இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

தினத்தந்தி

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் உணவு மற்றும் பொது விநியோக துறை மந்திரியாக இருப்பவர் தயாள்தாஸ் பாகெல். ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள இவருடைய வீட்டில் சத்தீஷ்கார் ஆயுத படையை சேர்ந்த ரோகித் சலாமே என்ற போலீஸ்காரர் நேற்றிரவு பாதுகாப்பு பணிக்கு சென்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அவருடைய பணிக்கான துப்பாக்கியை கொண்டு சுட்டு தற்கொலை செய்துள்ளார். முதல்கட்ட விசாரணையின்படி, சத்தீஷ்கார் ஆயுத படையின் முதல் பட்டாலியனின் இ-பிரிவை சேர்ந்த போலீஸ்காரர், மந்திரியின் வீட்டில் அதிகாலை 2 மணியளவில் பணியை முடித்திருக்கிறார்.

அதன்பின்னர், பாதுகாப்பு பணிக்காக வைத்திருந்த ரைபிள் துப்பாக்கியால், 2.10 மணியளவில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் அறிந்ததும், மூத்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

25 நாட்கள் விடுமுறை முடிந்து வேலைக்கு வந்து ஒரு வாரமே ஆன நிலையில், சலாமே இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவரிடம் இருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணம் பற்றிய தகவலை அறிவதற்கான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து