தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி மீது தேசத்துரோக வழக்கு

சத்தீஸ்கர் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராய்ப்பூர்

அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் கூறிச் சத்தீஸ்கர் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது. சத்தீஸ்கார் போலீஸ் பயிற்சிக் கல்லூரித் தலைவராக இருந்த ஜி.பி.சிங் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவருக்குச் சொந்தமான 15 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு, பொருளாதாரக் குற்றப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் ஜூலை 3 நாட்கள் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அரசுக்கு எதிராகவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் வெறுப்பைத் தூண்டும் வாசகங்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மீது தேசத்துரோகம், வெறுப்பைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜூலை 5 முதல் ஜி.பி.சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை