தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல்; 17 போலீசார் பலி

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 17 போலீசார் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடி படைகளை சேர்ந்த போலீசார் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், சிறப்பு அதிரடி படையை சேர்ந்த 5 பேர் மற்றும் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த 12 பேர் என 17 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. அவர்கள் நக்சலைட்டுகளுடனான மோதலில் பலியாகி இருக்க கூடும் என்றும் அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர் என்றும் சத்தீஷ்கார் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்