தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு சனிக்கிழமை பள்ளிக்கு புத்தகப்பை தேவையில்லை "யோகா, விளையாட்டு, பண்பாட்டு வகுப்புகள் நடைபெறும்"

சத்தீஸ்கரில் புபேஸ் பாகல் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.

தினத்தந்தி

ராய்பூர்,

சத்தீஸ்கரில் புபேஸ் பாகல் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பள்ளிக்கல்வித் துறை நேற்று ஒரு புதுமையான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இனி சனிக்கிழமை நடைபெறும் பள்ளிநாட்களில் மாணவர்கள் புத்தகப்பை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. அன்றைய தினம் முழுவதும், யோகா, உடற்பயிற்சி, விளையாட்டுகள் மற்றும் கலை பண்பாட்டு வகுப்புகள் நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.

மாணவர்கள் பள்ளிக் கல்வியை விருப்பத்துடன் படிக்கவும், கல்வியை செயல்முறை சார்ந்ததாக மாற்றும் நோக்கத்துடனும் இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை கூறி உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி கல்வியில் ஈடுபாட்டை வளர்க்க உதவும் என்றும் கூறி உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து