ராய்ப்பூர்,
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் கொண்ட பகுதிகள் அதிகளவில் உள்ளன. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் அவர்களை சரணடையும்படியும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில், சத்தீஷ்காரின் தம்தாரி என்ற பகுதியில் நக்சலைட்டுகள் சிலர் 10 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து உள்ளனர். அதன்பின்னர் அதனை வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு செயலிழக்க செய்து உள்ளனர்.