தேசிய செய்திகள்

சத்தீஷ்கார் ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

படுகாயமடைந்த 20 பயணிகளுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை சரக்கு ரெயில் நின்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியில் வந்த மெமு ரெயில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் மெமு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் நேற்று 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 20 பயணிகளுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்