தேசிய செய்திகள்

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலை செய்தியாளர் சந்திப்பு: தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும், சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் அங்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் முன்னேற்பாடுகளை குறித்து ஆய்வு செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்தயாரிப்புப் பணிகள், தேர்தல் தேதிகளை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்