தேசிய செய்திகள்

இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெலுங்கானாவில் 3 நாள் பயணம்

தெலுங்கானாவில் 3 நாள் பயணம் மேற்கொண்ட இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவை முதல் மந்திரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஐதராபாத்,

இந்திய தலைமை நீதிபதியாக கடந்த ஏப்ரலில் பொறுப்பேற்று கொண்ட என்.வி. ரமணா தெலுங்கானாவுக்கு தனது குடும்பத்துடன் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜ் பவனில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின்னர், நேற்று இரவு நீதிபதி ரமணா மற்றும் அவரது மனைவிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரவு விருந்து அளித்து உபசரித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் நீதிபதி ரமணா ஆந்திர பிரதேசத்தின் திருமலாவில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். தெலுங்கானாவின் ராஜ் பவனில் தங்கியுள்ள நீதிபதி, ஐதராபாத் நகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு