தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 9 மாநிலங்கள் உள்ள 46 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் தமிழகம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ளார்.

இதை தொடர்ந்து வருகின்ற 20 ஆம் தேதி 10 மாநிலங்களில் உள்ள 54 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மொத்தம் 19 மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்