தேசிய செய்திகள்

சபரிமலை தரிசனத்துக்கு வரும் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை: திருவிதாங்கூர் தேவஸ்தானம்

சபரிமலை தரிசனத்திற்கு வரும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சபரிமலையில் குழந்தைகள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் தேவை என்ற நிலை உள்ளது.

இதற்கு முன்னர் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஆர்.டி.பி.சி. ஆர். நெகட்டிவ் சான்றிதழ் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சபரிமலைக்கு அழைத்து வருவது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

அதில், சபரிமலைக்கு பெற்றோர் அல்லது உறவினர்களுடன் வரும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. மேலும் அந்த குழந்தைகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து அழைத்து செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து