தேசிய செய்திகள்

செல்போன் செயலிகள் மூலம் இந்தியாவை உளவுபாக்கிறது சீனா: உளவுத்துறை எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் 42 செயலிகளை (ஆப்) பயன்படுத்தி இந்தியாவை சீனா உளவுபார்க்கிறது என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் 42 செயலிகளை (ஆப்) பயன்படுத்தி இந்தியாவை சீனா உளவுபார்க்கிறது என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக உளவுத்துறை டிஐஜி வெளியிட்ட தகவலின் படி,

சீனாவின் பிரபலமான மொபைல் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் செல்போன்களை பயன்படுத்தி இந்தியாவின் பாதுகாப்பின் முக்கிய தகவல்களை சீன சேகரிக்கக்கூடும். சீனாவின் ஸ்மார்ட் செல்போன்களில் உள்ள ஆப்களை நீக்குவதன் மூலம் இதனை தவிர்க்க முடியும்.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலாக விளங்கும் விசாட், ட்ரூகாலர், வெய்போ, யூசி பிரவுசர் மற்றும் யுசி நியூஸ் உட்பட 42 பிரபலமான சீனப் பயன்பாடுகள் பட்டியலை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த ஆப்கள் சீன அதிகாரிகளுக்கு முக்கியமான தனிப்பட்ட தகவலை கடத்தும் சாத்திய கூறுகள் உள்ளது. இது ஒரு பெரிய பாதுகாப்பு பேரழிவு என கூறப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லையில் வெளியிடப்படும் துருப்புக்களுக்கு புதிய ஆலோசனை வழங்குவதில் இந்த ஆப்கள் பயன்படும் என கூறப்பட்டுள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்