தேசிய செய்திகள்

டெல்லியில் சீனர்களுக்கு தங்கும் விடுதிகளில் அனுமதி இல்லை -உரிமையாளர்கள் அறிவிப்பு

டெல்லியில் சீனர்களுக்கு தங்கும் விடுதிகளில் அனுமதி இல்லை என்று விடுதி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

லடாக்கில் நடந்த தாக்குதலுக்கு பின்னர், சீன தயாரிப்புகளை பயன்படுத்தக்கூடாது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பல இடங்களில் சீன தயாரிப்புகளை எரித்து போராட்டம் நடத்தப்படுகிறது. சீன தயாரிப்புகளை வாங்கவும் மாட்டோம், விற்பனை செய்யவும் மாட்டோம் என்று அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்த கூட்டமைப்புக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளனர்.

அதில், சீன தயாரிப்புகளுக்கு எதிரான உங்கள் கூட்டமைப்பின் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். எங்களது ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் சீன தயாரிப்புகளை பயன்படுத்த மாட்டோம். மேலும் இந்தியா வரும் சீனர்கள் டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு அறை ஒதுக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை