தேசிய செய்திகள்

கொல்கத்தா விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்.) வீரர்கள் வழக்கம்போல் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை சி.ஐ.எஸ்.எப். வீரர் ஒருவர் தனது துப்பாகியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எப். வீரர் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்