கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ்

நேற்று மட்டும் ஒரே நாளில் 2 ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் கோளாரால் தரையிறக்கம் செய்யப்பட்டன

தினத்தந்தி

மும்பை,

நேற்று டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட்1 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கராச்சியில் (பாகிஸ்தான்) அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குஜராத்தில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் துணை விமானி பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் தரையிறக்கம் செய்யப்ட்டது என கூறப்படுகிறது.

நேற்று மட்டும் ஒரே நாளில் 2 ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் கோளாரால் தரையிறக்கம் செய்யப்பட்டன.இந்த நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.விமான பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது என விமான போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து